crimesociety

தொட்டு தழுவினார்… முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணும் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்!

307views

முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணும் Pegasus மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் ரஞ்சன் கோகாய். உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு கட்டுப்படுத்துவதாக நீதிபதிகள் சிலர் ஊடகங்களை சந்தித்து பேட்டியளித்த போது, அந்த குழுவில் இருந்தவர் ரஞ்சன் கோகாய். பின்னாட்களில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக அமர்த்தப்பட்டார்.

ஆரம்ப நாட்களில் நடுநிலையாக அவர் செயல்பட்டது போல் சொல்லப்பட்ட நிலையில், அடுத்தடுத்து அவர் அளித்த தீர்ப்புகள் அவர் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என அவர் மீது புகார் எழுப்ப காரணமாக அமைந்தன. பாபர் மசூதி இடிப்பு வழக்கு, ரபேல் ஊழல் வழக்கு, கஷ்மீர் 370 தொடர்பான வழக்கு என பல வழக்குகளில் அவர் அளித்த தீர்ப்பு பாஜகவிற்கு ஆதரவாக உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இந்த நிலையில் அவர் மீது, நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.

(The alleged incident took place in October 2018 at the CJI’s residence office. The woman had written to 22 judges of the Supreme Court, detailing the sexual harassment and the repercussions that ensued. According to Scroll, which accessed the affidavit, the woman said that the former CJI allegedly hugged her around her waist, touched her all over her body and pressed his body against her. The woman also alleged that he asked her to hold him and did not let go of her as she stood frozen. )

அதாவது 2018ஆம் ஆண்டு, நீதிபதியின் முகாம் அலுவலகத்தில், தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக 22 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு அந்த பெண் புகார் அனுப்பினார். அந்த புகாரில், நீதிபதி தன்னை இடுப்பில் கை வைத்து அணைத்து கட்டிப்பிடித்ததாகவும், உடல் முழுவதும் தொட்டதாகவும், உடலில் அழுத்தம் கொடுத்ததாகவும் பரபரப்பு புகாரை எழுப்பினார்.

இந்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் அந்த பெண்ணின் புகாரை தள்ளுபடி செய்ததோடு, வேலையில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனிடையே ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் பின்னாட்களில் பாஜக சார்பில் எம்பியாக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் நீதிபதி மீது புகார் தெரிவித்த அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் மொபைல் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டு, உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Response

error: Content is protected !!