crimesocial media

குளியலறை பல்பில், ரகசிய கேமரா வைத்து, இளம் பெண் மருத்துவரை ஆபாசமாக படம் பிடித்த ஆண் மருத்துவ பேராசிரியர்!

323views

பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர், தனது படுக்கை அறை பல்ப் வேலை செய்யாததால், எலெக்ட்ரீசியனை வரவைத்து, பழுது பார்த்துள்ளார். அப்போது பல்பில், ரகசிய ஸ்பை கேமரா இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து குளியலறை பல்ப்பை ஆராய்ந்தபோது, அதிலும் ஸ்பை கேமரா பொருத்தப்பட்டிருந்தது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தான் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள மருத்துவ கல்லூரி மாணவிகள் விடுதியில் ரகசிய கேமராக்களை பொருத்தியவர், 42 வயதான மூத்த மருத்துவ பேராசிரியர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் புனே மருத்துவ சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response

error: Content is protected !!