bollywoodcinema

ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ்குந்ரா கைது ஏன்? பரபரப்பு பின்னணி!

183views

Kenrin என்ற பெயரில் பிரிட்டனில் இருந்து ஒரு ஆப் நடத்தப்படுகிறது. இந்த ஆப்பில் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இந்த ஆப்பின் முக்கிய அலுவலர் உமேஷ் காமத். இவர் ராஜ்குந்த்ராவின் முன்னாள் ஊழியர். சுமார் 8 ஆபாச வீடியோக்களை உமேஷ் காமத் அப்லோட் செய்திருக்கிறார்.

இந்த நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த ஆபாச ஆப்பில் ராஜ் குந்த்ரா முதலீடு செய்திருப்பதாக போலீசார் கருதுகின்றனர். இதன் அடிப்படையில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது 420 (மோசடி), 34 (பொது நோக்கம்) 292 மற்றும் 293 (ஆபாசம் மற்றும் அநாகரீகமாக காட்சிபடுத்துதல்) மற்றும் ஐடி சட்டங்கள், பெண்களை ஆபாசமாக சித்தரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு பிரபல நடிகையின் கணவர் இவ்வாறு ஆபாச ஆப் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருப்பது பாலிவுட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response

error: Content is protected !!