fact checkmuslim

ஆப்கன் அதிபர் தொழுகை நடத்தும் இடம் அருகே பயங்கர சத்தத்துடன் விழுந்த ராக்கெட்டுகள் – தொடர்ந்து தொழுதார்!

314views

ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி அதிபர் மாளிகையில் ஈத் பெருநாள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது, அருகே பயங்கர சத்தத்துடன், 3 ராக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்து நொறுங்கின. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், அஷ்ரப் கனி தொடர்ந்து தொழுகை நடத்தியதாக, ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளனது.

அதிபர் மாளிகையில் பச்சை மண்டலம் என அழைக்கப்படும் பாதுகாப்பு மிகுந்த பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தாக்குதலில் யாரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்து ஆப்கன் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது.

வழக்கமாக ஈத் பண்டிகை விடுமுறை காலங்களில் தாலிபான்கள் போர்நிறுத்த அறிவிப்பை வெளியிடும் நிலையில், இந்த ஆண்டு அப்படி ஒரு அறிவிப்பை வெளியிடவில்லை. இரு தரப்பு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து முட்டுக் கட்டை நீடித்து வருகிறது.

Leave a Response

error: Content is protected !!