crimesociety

மூதாட்டியை 3 துண்டாக வெட்டி, பிணத்துடன் இரவு முழுவதும் கழித்த இளம்பெண் – நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

287views

டெல்லியில் கொடுத்த ஒரு லட்சம் ரூபாய் கடனை திருப்பிக் கேட்ட பக்கத்து வீட்டு, பணக்கார மூதாட்டியை 3 துண்டாக வெட்டி, 3 Bag களில், அடைத்து, இரவு முழுவதும் பிணத்துடன் இருந்த இளம்பெண் பற்றிய தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லி நஜஃப்கர்க் பகுதியைச் சேர்ந்தவர் அணில் ஆர்யா. இவர் 72 வயதான பக்கத்து வீட்டு மூதாட்டி கவிதா என்பவரிடம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். கொடுத்த கடனை கவிதா திரும்பக் கேட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், ஆர்யா, அவரது மனைவியுடன் சென்று, மூதாட்டியின் வீட்டில் வைத்தே, அவரை கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

பின்னர் உடலை 3 துண்டுகளாக வெட்டி, 3 Bagகளில் திணித்துள்ளனர். இரவு முழுவதும் அந்த வீட்டிலேயே பிணத்துடன் தங்கி, வீட்டில் இருந்த ரத்தக் கறைகளை துடைத்துள்ளனர். மூதாட்டி அணிந்திருந்த நகைகளையும் எடுத்துக் கொண்டனர் பின்னர், அந்த Bag ஐ, தங்களது காரில் வைத்து, சாக்கடையில் வீசியுள்ளனர். பின்னர் இருவரும் போலீசுக்கு பயந்து, உத்தரப்பிரதேச மாநிலம் பரேலிக்கு தப்பிச் சென்றனர்.


இந்நிலையில் மூதாட்டி கவிதாவிடம் இருந்து எந்த தகவல் தொடர்பும் இல்லாததால், அவரது மருமகள் நேரில் வந்து பார்த்துள்ளார். வீடு பூட்டியிருந்த நிலையில், பக்கத்து வீட்டில் இருந்த இளம் தம்பதிகளும் மாயமாகி இருந்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த மருமகள் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து மாயமான தம்பதியை , உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் போலீசார் கைது செய்த அதே நேரம், டெல்லியில் சாக்கடையில் வீசப்பட்ட உடலையும் போலீசார் கண்டு பிடித்தனர்.


இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, இளம் தம்பதிகள், 3 பேக்களுடன், காரில் ஏறும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனையடுத்து, குற்றவாளிகளை போலீசார் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டு கொண்டனர். மூதாட்டி கவிதாவிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பிரபல நகைக்கடையில் 70 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் டெல்லியையே உலுக்கியுள்ளது.

Leave a Response

error: Content is protected !!