BJPPolitics

கம்யூட்டர் சயின்ஸ் படிக்க இந்தியாவுக்கு வந்த வங்கதேச குடிமகனுக்கு மத்திய அமைச்சர் பதவி?

299views

சிஏஏ சட்டத்தின் மூலம் வங்கதேசத்தவர்களை வெளியேற்றுவேன் என அமித்ஷா கூறி வந்த நிலையில், அவரது துணை அமைச்சரான நிதிஷ் பிரமானிக் வங்கதேச குடிமகன் என்றும், படிப்பதற்காக இந்தியா வந்தவர் என திரிணாமுல் காங்கிரஸ் பரபரப்பு புகார் எழுப்பியுள்ளது.


இதுகுறித்து ஆன்லைனில் செய்தியாளர்களை சந்தித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், நிதிஷ் பிரமானிக் என்பவர் தற்போது, மத்திய உள்துறை இணையமைச்சராக பொறுப்பேற்று இருப்பதாவும், அவர் வங்க தேச குடிமகன் என்றும், அவரை நாடாளுமன்றத்தில் பேச விட மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் நிதிஷ் பிரமானிக்கின் முழு விபரங்களை தெரிவித்துள்ளதாகவும் திரிணாமுல் தலைவர் தெரிக் ஓ பிரைன் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தின் கைபந்தா பகுதியில் உள்ள பாலஸ்பாரி மாவட்டம், ஹரிநாத்பூரைச் சேர்ந்த நிதிஷ் பிரமானிக், கம்யூட்டர் சயின்ஸ் படிப்பதற்காக இந்தியா வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் அவர் திரிணாமுல் காங்கிரசில் இருந்த நிலையில், பிறகு பாஜகவில் சேர்ந்து, மேற்கு வங்க மாநிலம் கூச்பெகார் தொகுதியில் போட்டியிட்டு, வென்று, நாடாளுமன்றத்திற்கு தேர்வானதாக திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
எனவே நாடாளுமன்றத்தில் நிதிஷ் பிரமானிக் பேசவோ, கேள்விகளுக்கு பதிலளிக்க அனுமதிக்க மாட்டோம் என திரிணாமுல் காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Leave a Response

error: Content is protected !!