societyமாவட்டம்

கணவன் மீது புகார் கொடுத்த பெண்ணுக்கு அன்று இரவு நேர்ந்த துயரம்!

369views

கணவன் மீது புகார் கொடுத்த இளம்பெண் அன்று இரவே மர்மமான முறையில்,அரை நிர்வாணமாக தூக்கில் தொங்கிய நிலையில் உடல் மீட்கப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் துர்கா தேவி தம்பதிக்கு 13 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனிடையே இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு உள்ளது. துர்கா தேவி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு சென்றுவிட்டதாகவும் பின்னர் வீட்டிற்கு வந்து அருண்குமார் இடம் உங்கள் நடத்தையில் சந்தேகம் இருப்பதாக கூறி சண்டையிட்டு உள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் துர்கா தேவி கணவன் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கணவன் மற்றும் மனைவி இருவரையும் போலீசார் விசாரணை செய்து உள்ளனர். இந்நிலையில் இரவு வீட்டில் மின் விசிறியில் அரை நிர்வாணமாக தூக்கிட்டு துர்கா தேவி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இந்த தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த துர்கா தேவியின் உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் துர்கா தேவியின் உடலை போலீசார் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக துர்கா தேவியின் கணவர் அருண்குமார் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் போலீஸார் அருண்குமாரை காவல் நிலையம் அழைத்து வந்து தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Response

error: Content is protected !!