Uncategorized

எண், எழுத்துக்களை தலைகீழாக சொல்லும் 5 வயது குழந்தை!

97views

நெல்லை மாவட்டம் அம்பை பகுதியை சேர்ந்த தங்கராஜ் – சுதா தம்பதியினரின் மகள் ரியோ டான்யா (வயது 5). இவர் அம்பையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறார்.
படிப்பில் மிகுந்த ஆர்வமுடைய இந்த சிறுமி தனது 5 வயதிலேயே பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
அதாவது 13 வினாடிகளில் ஆங்கில எழுத்துக்களை Z – ல் இருந்து A வரை தலைகீழாகவும், ஆங்கிலத்தில் 100 -ல் இருந்து 1 வரை தலைகீழாக சுமார் 45 வினாடிகளிலும், ஆங்கில எழுத்துக்களில் 26 வகையான பழங்களின் பெயர்களை 18 வினாடிகளிலும், தொடர்ந்து 2 மணி நேரமாக ஆங்கிலத்தில் புத்தகங்கள் வசித்தும், 35 ஆங்கில குழந்தை பாடல்களை 5 நிமிடத்தில் பாடியும் சாதனை புரிந்துள்ளார்.
இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், கலாம் உலக புத்தக ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.

Leave a Response

error: Content is protected !!