crimesociety

பழனி விடுதியில் கேரள பெண் கூட்டு பலாத்காரமா? நடந்தது என்ன?

110views

கேரள மாநில டிஜிபியிடம் கண்ணூரை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், கடந்த மாதம் தன்னை, பழனியில் உள்ள விடுதி ஒன்றில் அடையாளம் தெரியாத நபர்கள் கூட்டு பலாத்காரம் செய்ததாக, புகார் அளித்துள்ளார். ஆனால் இதுகுறித்து எந்த புகாரும் பழனி காவல்நிலையத்திற்கு வரவில்லை என தமிழ்நாடு போலீஸ் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜுன் 19ஆம் தேதி, ஒரு ஆண் மற்றும் பெண், தங்களை கணவன் மனைவி எனக் கூறி, விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். 3 நாட்களுக்கு பிறகு கண்ணூர் சென்ற அந்த பெண் விடுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார்.

அவர்கள் நடவடிக்கை எடுக்காததால், கேரள டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து துரித நடவடிக்கைக்கு கேரள போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த பெண் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதனிடையே தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், ஜுன் 19ஆம் தேதி ஒரு ஜோடி விடுதியில் அறை எடுத்து தங்கியதை பழனி காவல்துறையினர் உறுதிபடுத்தியுள்ளனர். ஜுன் 22ஆம் தேதி அந்த நபர் குடிபோதையில் காவல்நிலையம் சென்று, wallet மற்றும் மொபைல் போன் தொலைந்து போனதாக புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்த நபர் ஜுன் 25 ஆம் தேதி கண்ணூர் சென்று, பலாத்கார புகார் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கண்ணூரில் உள்ள வழக்கை பழனிக்கு மாற்றினால் மட்டுமே இதுகுறித்து முழு விசாரணை நடத்த முடியும் என பழனி காவல்துறை கூறியுள்ளது. கேரளாவில் இருந்து அதிகமான பக்தர்கள், பழனிக்கு வருகை தரும் நிலையில், இந்த புகார், பழனி நகர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response

error: Content is protected !!