Politicsworld news

ஆப்கன் கந்தகார் துணை தூதரகத்தை மூடிய இந்தியா – அதிகாரிகள் டெல்லி திரும்பினர்!

223views

ஆப்கானிஸ்தானின் கந்தகாரில் உள்ள துணை தூதரகத்தை மூடியுள்ள இந்தியா, அங்கு பணியாற்றி 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்களை தனி விமானம் மூலம் டெல்லி கொண்டு வந்துள்ளது.

நேட்டோ படைகளின் வெளியேற்றம் காரணமாக, ஆப்கானில் மீண்டும் தாலிபான்கள் முன்னேறி வருகின்றனர். அவர்களின் தலைநகராக இருந்த கந்தகாரை அவர்கள் நெருங்கியுள்ளனர். ஆப்கனின் 85 சதவீத பகுதிகளை கைப்பற்றியுள்ளதாக தாலிபான்கள் அறிவித்துள்ள நிலையில், அதனை ஆப்கன் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகார் துணை தூதரகத்தை இந்தியா மூடியுள்ளது. ஏற்கனவே ஜலாலாபாத், ஹெரத் நகரங்களில் இருந்த துணை தூதரகங்களை இந்தியா மூடியது. தற்போது, காபூல் தூதரகம், Mazar-e-Sharif நகரில் உள்ள துணை தூதரகங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

கந்தகார் அருகே உள்ள பஞ்ச்வாய் மாவட்டத்தை தாலிபான்கள் கைப்பற்றியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கந்தகார் துணை தூதரகத்தை மூடியுள்ளதாக இந்தியா விளக்கம் அளித்துள்ளது. நிலைமை சரியானதும், மீண்டும் தூதரகம் திறக்கப்படும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாலிபான்களுடன், ஆப்கன் அரசு மட்டுமின்றி, இந்தியா, ஈரான், ரஷியா அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தற்போது சீனாவை தாலிபான்கள் நண்பன் என புகழ்ந்துள்ளதோடு, உய்க்கூர் முஸ்லீம் போராளிகளுக்கு ஆப்கன் மண்ணில் இடம் தர மாட்டோம் என்றும் சீனாவின் வயிற்றில் தாலிபான்கள் பால் வார்த்துள்ளனர். அதே போல் வியட்நாமில் ஏற்பட்டது போன்ற தோல்வி அமெரிக்காவுக்கு ஆப்கனில் கிடைத்துள்ளதாக சீன பத்திரிக்கைகள், தாலிபான்களை புகழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Response

error: Content is protected !!