admkPolitics

OPS – EPSஐ கட்சியில் இருந்து நீக்கி கோவில்பட்டி அதிமுக நிர்வாகிகள் தீர்மானம்!

151views

கோவில்பட்டி அதிமுக யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் OPS – EPSஐ கட்சியில் இருந்து நீக்கி கோவில்பட்டி அதிமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

சசிகலா மீண்டும் அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆறுமுக பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக பல்வேறு துணை அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.


அண்மையில் சசிகலாவுடன் தொலைப்பேசியில் பேசியதற்காக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ரூபம் கே வேலவனும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

Leave a Response

error: Content is protected !!