BJPcinemaPolitics

நான் பாஜக அரசின் சட்டத்தை ஆதரிக்கவில்லை – தங்கர் பச்சான் போலீசில் புகார்!

108views

மோடி அரசு கொண்டுவந்துள்ள புதிய திரைப்பட மசோதாவை தான் எதிர்ப்பதாகவும், ஆனால், சிலர் அந்தச் சட்டத்தை நான் ஆதரிப்பது போன்று போட்டோ ஷாப் செய்து அவதூறு பரப்புவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குநர் தங்கர் பச்சான் புகார் செய்துள்ளார்.

தங்கர் பச்சான் அந்தச் சட்டத்தை ஆதரித்து கொடுத்த பேட்டியை, தனியார் தொலைக்காட்சி கிராபிக்ஸ் கார்டாக வெளியிட்டது. ஆனால் மர்ம நபர்கள் சிலர், அதே தொலைக்காட்சியின் டெம்ளேட்டை பயன்படுத்தி, தங்கர் பச்சான் அந்த சட்டத்தை ஆதரிப்பது போன்று கிராபிக்ஸ் கார்டு செய்து வெளியிட்டுள்ளனர்.

இதனால் மக்கள் மத்தியில் ஒரு குழப்பம் ஏற்பட்டது. காரணம் தங்கர் பச்சான் வழக்கமாக பாஜகவின் பல கொள்கைகளை ஆதரிப்பவர். எனவே இந்த சட்டத்தையும் அவர் ஆதரிப்பார் என வலைதளவாசிகள் பேச ஆரம்பித்தனர்.

இந்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அந்த சட்டத்தை தான் கடுமையாக எதிர்ப்பதாக தங்கர்பச்சான் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Response

error: Content is protected !!