societyசென்னை

சென்னை மண்ணடியில் 4வது மாடியில் இருந்து குதித்த பெண் பலி!

237views

சென்னை மண்ணடி எம்.கே. கார்டன் பகுதியில் கணவரின் சகோதரர் மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக, ஹாஜிரா என்ற பெண் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மண்ணடியில் வசிக்கும் சுல்தான் என்பவரின் மனைவி ஹாஜிரா (வயது 19). திருமணம் ஆகி 3 மாதமே ஆகியுள்ளது.

இந்நிலையில் சுல்தானின் சகோதரர் சலீமின் மனைவி பஸ்ஸிம் ஜானுக்கும், ஹாஜிராவுக்கும் இடையே குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த ஹாஜிரா, 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. உடலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து எஸ்பிளனேடு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தார், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

Leave a Response

error: Content is protected !!