2021 ElectionadmkBJPcongresscoronacovid 19dmkelectiontamilnadu

ஒட்டப்பிடாரத்தில் டெபாசிட் இழந்த கிருஷ்ணசாமி – நாம் தமிழருக்கு கீழ் சென்றார்!

314views

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து, அண்மைக்காலமாக கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் டாக்டர் கிருஷ்ணசாமி. பாஜகவின் தீவிர ஆதரவாளராக இருந்த, இவருக்கு அக்கூட்டணியில் இடம் கிடைக்காமல் போகவே, தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.இவரது அறிவிப்பை எந்த கட்சியும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

காரணம் இவருக்கு தற்போது, எந்த வாக்கு வங்கியும் இல்லை. அதனை இந்த தேர்தல் இன்னும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஒட்டப்பிடாரம் தொகுதியில் ஒரு காலத்தில் தனித்து நின்று வெற்றி பெற்ற கிருஷ்ணசாமி, இந்த முறை, வெறும் 6544 வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட் இழந்துள்ளார். இந்த தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் வைகுண்டமாரி 22413 வாக்குகளை பெற்றுள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக வளர்ந்த கிருஷ்ணசாமி, அதிகார வர்க்கத்தின் அடிமையாக மாறியதால், இந்த மோசமான தோல்வி ஏற்பட்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. கிருஷ்ணசாமியின் வழியில் சென்ற ஜான் பாண்டியனும், சென்னை எழும்பூரில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response

error: Content is protected !!