2021 Electioncoronacovid 19electiontamilnadu

தனிச் சின்னத்திலும் சாதித்து காட்டிய விசிக – சிறுத்தை என்பதை நிரூபித்த தொல்.திருமாவளவன்!

190views

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் சிறிய கட்சிகளுக்கு அமிலச் சோதனை என்றால் அது மிகையாகாது. குறிப்பாக திமுக கூட்டணியில் இடம்பெற்ற, மதிமுக, கொமதேக, மமக உள்ளிட்ட இன்னும் சில கட்சிகள் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட கேட்டுக் கொள்ளப்பட்டன. சில கட்சிகள் திமுக சின்னத்தை தாங்களே கேட்டுப் பெற்றது தனிக்கதை.

எப்படியும் தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும், வென்றால் மட்டுமே வாழ்வு, இல்லையேல் சாவு என்ற நிலையில் சிறிய கட்சிகள் இருந்தன. இதனை திமுகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டது. இந்நிலையில், தனிச் சின்னமே தன்மானம், இரவல் சின்னம் அவமானம் என்பதை வாயில் சொல்லாமல், செயலில் காட்டியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

போட்டியிட்டால் தனிச் சின்னம் தான் என்பதில் உறுதியாக இருந்தார் திருமாவளவன். அந்த அடிப்படையில் அந்தக் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதோடு, அவர்கள் ஏற்கனவே போட்டியிட்ட பானைச் சின்னத்தில் மீண்டும் போட்டியிட்டனர். இதில் திருப்போரூர் தொகுதியில் போட்டியிட்ட எஸ்எஸ் பாலாஜி, நாகப்பட்டினத்தில் போட்டியிட்ட ஆளுர் ஷாநவாஸ், காட்டுமன்னார் கோவிலில் போட்டியிட்ட சிந்தனைச் செல்வன், செய்யூர் பனையூர் பாபு ஆகியோர் மகத்தான வெற்றி பெற்றுள்ளனர்.

தொலைக்காட்சி விவாதங்களில் திறம்பட, சமரசமின்றி கருத்துக்களை எடுத்து வைக்கும் வன்னியரசு, வானூர் தொகுதியில் தோல்வியை தழுவியது விசிகவினரை மட்டுமின்றி, பெரியாரிய, அம்பேத்கரிய உணர்வாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 6 தொகுதிகள் பெற்று, தனிச் சின்னத்தில் 4 இடத்தில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி. மிகக் கடுமையான அரசியல் சூழல்களிலும் தெளிவாக முடிவுகளை எடுக்கும் தொல். திருமாளவன் இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறார்…

Leave a Response

error: Content is protected !!