2021 ElectionadmkBJPcoronacovid 19dmkelectiontamilnadu

வேல்முருகனின் வெற்றி – மாற்று அரசியலுக்கான வெற்றி!

223views

தமிழகத்தில் மக்கள் போராட்டங்களை அதிகம் நடத்திய கட்சிகளில் ஒன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி. ஏற்கனவே பாமக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, தனது சிறப்பான செயல்பாடுகளால், ஜெயலலிதாவால் பாராட்டப்பெற்றவர் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன்.

தொடர்ந்து, ஈழத் தமிழர்களுக்கான, இங்குள்ள தமிழர்களுக்காகவும், சாதி, மத அரசியலுக்கு எதிராகவும் களத்தில் நின்றவர். அவர் மீது அடுக்கடுக்கான வழக்குகள், உடல் நலக்குறைவு என பல தடைகளை தாண்டி பண்ருட்டி தொகுதியில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

92917 வாக்குகள் பெற்று வேல்முருகன் வெற்றி பெற்று, மீண்டும் சட்டமன்றத்திற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார் வேல்முருகன். அவரது வெற்றி மாற்று அரசியலை விரும்பும் மக்களுக்கு, உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Leave a Response

error: Content is protected !!