2021 ElectionBJPcoronacovid 19

கேரள இடைத் தேர்தலில் 1 லட்சத்து 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முஸ்லீம் லீக் வேட்பாளர்!

272views

கேரள மாநிலம் மலப்புரம் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் அப்துல் சமத் சமதானி 1 லட்சத்து 14ஆயிரத்து 615 வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளரை தோற்கடித்து, வெற்றி வாகை சூடினார்.

இந்த தொகுதியில் சமதானி 5 லட்சத்து, 38 ஆயிரத்து, 248 வாக்குகளும், சிபிஎம் கட்சியின் சானு, 4 லட்சத்து, 23 ஆயிரத்து, 633 வாக்குகளும், பாஜக வேட்பாளர் அப்துல்லா குட்டி, 68ஆயிரத்து 935 வாக்குகளும் பெற்றனர். எஸ்டிபிஐ வேட்பாளர் தஸ்லீம் ரஹ்மானி 46 ஆயிரத்து 758 வாக்குகள் பெற்றார்.

ஏற்கனவே முஸ்லீம் லீக் சார்பில் வென்ற குஞ்ஞாலி குட்டி, ராஜினாமா செய்து, மாநில அரசியலில் குதித்ததால், இங்கு இடைத் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Response

error: Content is protected !!