2021 Electioncoronacovid 19election

இஸ்லாமிய முதலமைச்சர் வந்து விடுவார் – கிறிஸ்தவர்களை அச்சுறுத்திய கேரள சிபிஎம்?

789views

கேரளாவில் பாஜகவிற்கு ஒரு இடம் கூட கிடைக்க விடாமல் செய்து விட்டதாக பினராயி விஜயனை பல தரப்பினரும் புகழ்ந்து தள்ளி வரும் நிலையில், கேரளாவில் சிபிஎம் கட்சி முன்னெடுத்த ஒரு யுக்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில் சிபிஎம் வெற்றி பெற்றால், மதரஸா நிர்வாகங்கள் அழிக்கப்படும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது.

இதற்கு ஆதரவாக, ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் அமைப்பும், இடதுசாரி அரசுக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்தது. அதே நேரம் முஸ்லீம் லீக்கின் கோட்டையாக கருதப்படும், மலபாரில் இந்த முறை இடதுசாரிகள் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளன. முஸ்லீம் லீக்கின் சிட்டிங் தொகுதிகளான, அழிக்கோடு, கோழிக்கோடு தெற்கு, குட்டியாடி ஆகிய தொகுதிகளை அந்தக் கட்சி இழந்துள்ளது. இதற்கு காரணம், அப்துல் நாசர் மதானியின் பிடிபி மற்றும் கந்தபுரம் அபூபக்கர் முஸ்லியார் தலைமையிலான சுன்னத் ஜமாத் பிரிவும் நேரடியாகவே இடதுசாரிகளை ஆதரித்துள்ளன.

அதே போல் எஸ்டிபிஐ மற்றும் வெல்பேர் பார்ட்டி கட்சிகள், இடதுசாரிகளுக்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ளவில்லை. இதனால், முஸ்லீம் லீக் அதிருப்தி வாக்குகள் நேரடியாவே இடதுசாரிகளை சென்றடைந்துள்ளது.
ஒரு பக்கம் இஸ்லாமிய வாக்குகளை இவ்வாறு கவர்ந்த சிபிஎம், மறுபுறம், காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால், கூட்டணி தலைமை பதவியை முஸ்லீம் லீக் தலைவர் குஞ்ஞாலி குட்டி கைப்பற்றி, கேரள முதலமைச்சராக ஆகி விடுவார் என கிறிஸ்தவர்களை சிபிஎம் அச்சுறுத்தியதாக, வெல்பேர் பார்ட்டியின் மாநிலத் தலைவர், ஹமீத் வாணியம்பலம் தெரிவித்துள்ளார்.1979 ஆம் ஆண்டு கேரள முதலமைச்சராக முஸ்லீம் லீக் கட்சியின் சி.எச். முகமது கோயா பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Response

error: Content is protected !!