admkBJPcoronacovid 19tamilnadu

அதிமுக கூட்டணியோடு பெற்ற வாக்குகளை தனித்து நின்று பெற்ற சீமான்!

255views

திருவெற்றியூர் தொகுதியில், அதிமுக கூட்டணியின் சார்பில் அதிமுக பெற்ற வேட்பாளருக்கு இணையாக, தனித்து நின்று சீமான் வாக்குகளை பெற்றுள்ளார். இந்த தொகுதியில், சுமார் 87 ஆயிரம் வாக்குகளை பெற்று திமுக வேட்பாளர் சங்கர் வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுக வேட்பாளர் குப்பன் சுமார் 50 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளார். சீமான் சுமார் 48 ஆயிரத்து 497 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுகவை விட சுமார் 1500 வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்றுள்ளார் சீமான். அதிமுக மாபெரும் கூட்டணியோடு, பெற்ற வாக்குகளை தனித்து நின்று சீமான் பெற்றது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில் இருந்து நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி, பல மடங்கு உயர்ந்திருப்பதும் தெளிவாகியுள்ளது. பலமான கூட்டணியோடு தேர்தலை சந்தித்தால், நாம் தமிழரும் மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.

Leave a Response

error: Content is protected !!