coronacovid 19Karnataka

பாஜக தலைவரின் பேச்சை கேட்டு, கொரோனாவுக்கு எலுமிச்சை சாற்றை மூக்கில் விட்டவர் பலி!

174views

கொரோனா நோயாளிகள் எலுமிச்சை சாறு இரண்டு சொட்டு, மூக்கில் விட்டால், கொரோனா குணமாகும் என பாஜக தலைவர் சொன்னதை கேட்டு, அவ்வாறு செய்த, பள்ளி ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.கர்நாடக மாநில பாஜக முக்கியத் தலைவரும் முன்னாள் எம்பியுமான விஜய் சங்கேஸ்வர் என்பவர் தான் ஊடகங்களை கூட்டி, இந்த எலுமிச்சை சிகிச்சை ரகசியத்தை வெளியிட்டார். அப்போது, மருத்துவத்துறையைச் சேர்ந்த பலர் இவ்வாறு செய்யக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

முன்னாள் எம்பியுமான விஜய் சங்கேஸ்வர்

இந்நிலையில், ராய்ச்சூரைச் சேர்ந்த, 43 வயதே ஆன அரசு பள்ளி ஆசிரியர் பசவராஜ் என்பவர், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மூக்கில் எலுமிச்சை சாற்றை விட்டுள்ளார். உடனடியாக வாந்தி ஏற்பட்டு, மயங்கி விழுந்த நிலையில், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அரசு பள்ளி ஆசிரியர் பசவராஜ்

ஆனால் அவர் போகும் வழியிலேயே உயிரிழந்தார். அவர் எலுமிச்சை சாற்றை மூக்கில் விடும் வரை நல்ல உடல்நலத்துடனே இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.உயிரிழந்த பசவராஜூக்கு திருமணமாகி, மனைவியும், 2 பெண் குழந்தைகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response

error: Content is protected !!