2021 ElectionadmkBJPcongresscoronacovid 19dmkelection

மோடியின் மகனுக்கு தோல்வி – பாழாய் போன பால்வளத்துறை மாஜி!

363views

ஜெயலலிதா, மறைந்தாலும் மறைந்தார், அட்ராஸ் இல்லாத பல அமைச்சர்கள், இது தான் சாக்கு என தங்கள் மூளையில் உதித்த, அனைத்தையும் பேசி, பெரும் வெறுப்பை மக்களிடம் சாம்பாதித்தனர். அதில் முக்கியமானவர், தன்னை முரட்டு சங்கியாக அடையாளம் காட்டிக் கொண்ட ராஜேந்திர பாலாஜி.

மோடி எங்கள் டாடி, எல்லாத்தையும் மேல இருக்கிறவன் பாத்துக்கிடுவான் என்றெல்லாம் பேசி, பாஜகவில் ஒரு துண்டு போட்டு வைத்திருந்தார். இந்நிலையில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் 2842 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறார். அதே நேரம் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் 3348 வாக்குகள் பெற்றுள்ளார்.

புதிய தமிழகம் ஒரு வேளை அதிமுக கூட்டணியில் இருந்திருந்தால், இங்கு ராஜேந்திர பாலாஜி வெற்றி பெற்று இருப்பார். ஆனால் விதி விளையாண்டு விட்டது. மேலே இருப்பவனும் காப்பாற்றவில்லை. இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி 15 ஆயிரத்து 448 வாக்குகளை பெற்றிருப்பது குறிப்பிடித்தக்கது.

Leave a Response

error: Content is protected !!