BJPcoronacovid 19

மருத்துவரின் காலில் விழுந்து மருந்து கேட்டும், கிடைக்காமல் 24 வயது மகனை இழந்த தாய்! யோகி ஆட்சியின் கோரம்!

336views

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், கொரோனாவால் உயிருக்கு போராடிய தனது 24 வயது மகனுக்கு Remdesivir மருந்து கேட்டு, மருத்துவரின் காலில் தாய் விழுந்த வீடியோ வைரலான நிலையில், மருந்து கிடைக்காமல், அந்த பெண்ணின் மகன் உயிரிழந்த தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நொய்டாவைச் சேர்ந்த ரின்கி தேவியின் மகனுக்கு Remdesivir மருந்து தேவைப்பட்ட நிலையில் தலைமை மருத்துவமனைக்கு சென்று வாங்கி வருமாறு கூறியுள்ளனர். அங்கு சென்று மருந்து கேட்டபோது, தலைமை மருத்துவ அதிகாரியை பார்க்கச் சொல்லியுள்ளனர். அந்த பெண்ணும் பல மணி நேரம் காத்திருந்து, தலைமை மருத்துவ அதிகாரி தீபக் என்பவரை பார்த்துள்ளார்.

அவரோ, அந்த பெண் கொண்டு வந்த மருந்து சீட்டை பார்த்துவிட்டு, ரெம்டெஸ்சிவீர் மருந்து இல்லை என்று சொல்லி கை விரித்தார். ஆனாலும் விடாமல் அந்த பெண், அந்த அதிகாரியின் காலில் விழுந்து, எப்படியாவது தனது மகனை காப்பாற்றுமாறு மன்றாடினார். ஆனால் மருந்து இல்லை என திட்டவட்டமாக கூறிவிட்டு, சென்று விட்டார் தலைமை மருத்துவ அதிகாரி தீபக்.

இதனையடுத்து, தனது மகன் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அந்த பெண் ரின்கி தேவி. அங்கு மருத்துவர்களோ, உனது மகன் இறந்து அரை மணி நேரம் ஆகிறது என கூறியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் மரணங்கள், யோகி ஆதித்யாநாத்தின் கோரத் தாண்டவ ஆட்சியை அம்பலப்படுத்துகின்றன.

Leave a Response

error: Content is protected !!