Indiaworld

ஏழை மக்கள் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்க ரூ. 85 லட்சம் ஜகாத் கொடுத்த இஸ்லாமிய தொழில் அதிபர்!

133views

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த டிரான்ஸ்போர்ட் அதிபர் பியாரே கான் என்பவர் ரமலான் மாதம் வழங்க இருந்த ஜகாத் பணம் ரூ. 85 லட்சத்தை, ஏழை எளிய மக்களின் ஆக்சிஜன் சிலிண்டர் தேவைக்காக வழங்கியுள்ளார்.அவர் அளித்த பணத்தின் மூலம் 400 டன் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கப்பட்டுள்ளது. தற்போது ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், வழக்கமான தொகையை விட 14 லட்சம் ரூபாய் அதிகம் கொடுத்து, ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கியுள்ளார்.

நாக்பூர் ரயில் நிலையத்தில் பழக்கடை வைத்து, தனது வாழ்க்கையை தொடங்கிய பியாரே கான், தற்போது, 400 கோடி ரூபாய் மதிப்பிலான டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் அதிபராக உள்ளார். ஜக்காத் பணம் என்பது இஸ்லாமியர்கள் தங்களின் வருட வருமானத்தில் இருந்து, 2.5 சதவீத தொகையை, ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவது ஆகும்.

Leave a Response

error: Content is protected !!