coronacovid 19Indiatamilnaduநீலகிரி

இரவி குளம் தேசிய பூங்காவில் 98 வரையாடு குட்டிகள் பிறந்துள்ளன!

189views

இந்தியாவில் புகழ்பெற்ற இரவிகுளம் தேசிய பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் நீலகிரி வரையாடுகள் உள்ளன. வரையாடுகளை பார்ப்பதற்கென்றே இந்தியா மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவார்கள். ஆண்டுதோறும் நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு பணியை கேரள வனத்துறை தொடங்கும். இந்த ஆண்டு நீலகிரி வரையாடுகள் கணக்கெடுக்கும் பணியில் 66 வன ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.கடந்த ஆண்டு கணக்கெடுத்ததில் 723 நீலகிரி வரையாடுகள் 111 புதிய புதிதாக பிறந்த குட்டி வரையாடுகள் மூணாறு பகுதியில் காணப்பட்டது.

இந்த ஆண்டு புதியதாக 98 குட்டி வரையாடுகள் பிறந்துள்ளதாக வனத்துறையினர் ஒரு குறிப்பில் கூறியுள்ளனர்.தற்போது கேரளாவில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு சுற்றுலாப்பயணிகள் வர தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response

error: Content is protected !!