BJPcoronacovid 19Politics

தூத்துக்குடிக்கு சென்று குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி – பாஜக ஆதரவாளர் வேலூர் இப்ராஹிம் கைது!

456views

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தூத்துக்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அங்கு சென்று குழப்பத்தை ஏற்படுத்த முயன்ற பாஜக ஆதரவாளர் வேலூர் இப்ராஹிம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் பல தரப்பினரையும் கட்சியில் சேர்த்து வரும் தமிழக பாஜகவிற்கு, முஸ்லீம் முகம் தேவைப்பட்ட நிலையில், அதனை பயன்படுத்திக் கொண்டு, பாஜக ஆதரவாளராக தமிழகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார் வேலூர் இப்ராஹிம் என்ற நபர்.

சர்ச்சைக்குரிய விசயங்களில் தலையிட்டு, அவ்வப்போது, சட்டம் ஒழுங்கு பிரச்னையையும் ஏற்படுத்தி வருகிறார். இதனால் இவர் வருகிறார் என்று தெரிந்தால், திராவிட, தமிழ்தேசிய, இடதுசாரி, இஸ்லாமிய அமைப்பினர் இவரை கண்டித்து போராட்டம் நடத்துகின்றனர். இதன் மூலம் தனக்கு விளம்பரம் கிடைப்பதோடு, பாஜகவில் இருந்து பல உதவிகளும் கிடைப்பதால், தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி வருகிறார்.

இவரை கைது செய்து, வலுவான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யாமல் காவல்துறையும் அனுப்பி விடுவதால், தொடர்ந்து, இவர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் மதுரையில் இருந்து, தூத்துக்குடி சென்று, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இவர் திட்டமிட்டார். அப்படி சென்றால், தூத்துக்குடி மக்கள், இவரை வெளுத்து வாங்கி விடுவார்கள் என்பதை அறிந்து, மதுரை கேகே நகரிலேயே இவரை காவல்துறை முன்னெச்சரிக்கையாக கைது செய்தது. இவர் மீது பெயரளவு நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்பட்டு, பின்னர் காவல்துறை இவரை விடுவிப்பது தொடர் கதையாகி வருகிறது.

Leave a Response

error: Content is protected !!