covid 19crimeகோவைமாவட்டம்

காவித் துண்டால் சுற்றி, ஊழியரின் கதையை முடித்த சலூன் உரிமையாளர் – வேறு வேலைக்கு செல்ல முயன்றதால் ஆத்திரம்

355views

சலூன் கடையில் போதிய வருமானம் இல்லாததால் வேறு கடைக்கு செல்வதாக கூறிய ஊழியரை, காவித் துண்டால் சுற்றி, தாக்கி, கொலை செய்த, சலூன் உரிமையாளரை கோவை போலீசார் கைது செய்தனர்.செந்தில் என்பவர் லீசுக்கு எடுத்து இருந்த சலூன் கடையில் திருச்சியை சேர்ந்த நந்தா மற்றும் குமார் ஆகியோர் வேலை செய்து வந்து உள்ளனர்.

வேலையில் சரியான வருமானம் கிடைக்காததால் வேறு கடைக்கு செல்வதாக குமார் கூறி உள்ளார். நீண்ட நாட்களாக தன்னிடம் வேலை செய்து வந்த குமார், தான் பார்த்து கொடுத்த வீட்டில் இருந்து வந்த நிலையில், வேறு கடைக்கு செல்வதாக கூறியது செந்திலுக்கு கடும்கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கடந்த 9- ஆம் தேதி இரவு குமார் மற்றும் நந்தா தங்கி இருந்த ஓணப்பாளையம் வீட்டிற்கு சென்று செந்தில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளார். ஒரு கட்டத்தில் குமாரை கடுமையாக தாக்கி விட்டு சென்று விட்டார். குமார் சுருண்டு விழுந்து விட்டார். மறுநாள் காலையில் குமாருடன் தங்கிருந்த நந்தா எழுந்து பார்த்தபோது, குமார் சடலமாக கிடந்துள்ளார்.

இதனையடுத்து யாருக்கும் தெரியாமல் செந்தில் குமார் மற்றும் சக நண்பர்களான கபில் தேவ், அருள் பிரகாஷ், நந்தகுமார், உள்ளிட்டவர்களுடன் உடலை காரில் எடுத்துக்கொண்டு 10- ஆம் தேதி இரவு யானை மடுவு பகுதியில் புதைத்து விட்டு சென்று உள்ளனர்.இந்த நிலையில் தனது மகனிடம் இருந்து எந்த போனும் நீண்ட நாட்களாக வரவில்லை என குமாரின் தந்தை தொண்டாமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இதனையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் இதுகுறித்து விசாரணையை தொடங்கிய நிலையில், தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் சலூன் உரிமையாளர் செந்தில் சரணடைந்தார். மற்றவர்களை போலீசார் தேடி பிடித்தனர்.
உடல் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டிய நிலையில், முகம் காவி துண்டால் சுத்தப்பட்டு இரண்டு கைகழும் கட்டப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயம் இருந்துள்ளது.

Leave a Response

error: Content is protected !!