coronacrimeகன்னியாகுமரிமாவட்டம்

காதலிக்க நான் தகுதியானவள் இல்லை காதலனுக்கு வாட்ஸ்அப்-ல் அனுப்பி விட்டு இளம்பெண் தற்கொலை!

133views

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார் , இவருக்கு நிபியா என்ற மகள் உள்ளார் , நிபியா ஏர்வாடியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சிங் பயிற்சி மாணவியாக இருந்து வருகிறார், இந்த நிலையில் நிபியாவிற்கு பல ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பல பேருடன் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது

இந்நிலையில் தக்கலை அருகே உள்ள வேர்கிளம்பி பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் ஜோ என்பவருடன் நிபியாவிற்கு நட்பு ஏற்பட்டு நட்பு காதலாக மாறியுள்ளது. தனது கதலனுக்காக ஆண் நண்பர்கள்ளை நிபியா நிராகரித்து உள்ளார்.ஆனால் நண்பர்களோ விடாமல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜோவுக்கும் நிபியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் நிபியா தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார், முன்னதாக தனது காதலனுக்கு உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை பதிவு செய்து வாட்சப்பில் அனுப்பி உள்ளார்.நிபியா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிபியா உடலை மீட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் நிபியா கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது அதில் , என்னைப் பற்றி தெரிந்தும் என்னை காதலித்தாய் ஆனால் என்னால் மாற முடியவில்லை நான் செய்த தவறுகளை திருத்திகொள்ள முடியவில்லை உன்னை காதலிக்க நான் தகுதியானவள் இல்லை என்றும் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும் அதில் எழுதி வைத்துள்ளார். இதனை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Response

error: Content is protected !!