covid 19crimeகரூர்திருச்சிமாவட்டம்

பட்டப்பகலில் இளைஞர் ஒருவரை அரை நிர்வாணத்தோடு அடித்து உதைக்கும் இளைஞர்களால் பரபரப்பு

135views

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த பேரூர் உடையார்ப்பட்டி என்கின்ற கிராமத்தினை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர், கடந்த 19 ம் தேதி அன்று காரில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த ஒரு இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியுள்ளது. இந்நிலையில், கவனக்குறைவினால் ஏற்பட்ட இந்த விபத்திற்கு சுப்பிரமணியன் என்பவர், அந்த இருசக்கர வாகன உரிமையாளரிடம் மன்னிப்பும் கோரியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி சுப்பிரமணியை சமூக பெயரை கூறி இழிவாக பேசியதோடு தாகதா வார்த்தைகளால் , தாக்குதல் நடத்தியுள்ளனர்.தாக்குதலுக்கு உள்ளான சுப்பிரமணியை மீட்ட அவரது மனைவி ராதா மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட சுப்பிரமணி என்பவரை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது.

இச்சம்வம் பற்றி சுப்பிரமணி மனைவி ராதா புகார் கொடுக்கவே போலீசார் புகாரை வாங்காமல் உன் கணவர் மீது தான் வழக்கு பதிய வேண்டுமென்றும், உடனடியாக புகாரை வாபஸ் வாங்கு என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியின சமூகத்தினை சார்ந்தவர்கள் ஒன்றிணைந்து திடீரென்று அரைநிர்வாணத்தோடு, காவல்துறையினரை கண்டித்து, கோஷங்கள் எழுப்பியபடி, புகார் கொடுக்க சென்றனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் ஒருவர் மட்டும் புகார் கொடுக்க அனுமதி வழங்கப்படும் என்று கூறினார் இதை அடுத்து அச்சமூதாயத்தைச் சேர்ந்த ஒருவர் இச்சம்வம் குறித்து புகார் மனுவினை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் அளித்தார்.சுப்பிரமணியன் மீது கண்மூடி தனமாக தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Leave a Response

error: Content is protected !!