BJPsocial mediaworld

பாஜக தலைவரின் வருகைக்காக காத்திருந்த பிணம் – பிண வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பாஜக தலைவர்!

360views


உடல் ஏற்றப்பட்ட பிண வாகனத்தை, அணிவகுத்து நிற்க வைத்து, அதனை தொடங்கி வைத்த பாஜக தலைவரின் வினோதச் செயலால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தின் துணைத்தலைவராக இருப்பவர் அலோக் சர்மா. போபாலில் கொரேனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல போதிய அமரர் ஊர்திகள் இல்லாததால், 6 அமரர் ஊர்திகளை அன்பளிப்பாக வழங்குதாக அலோக் சர்மா அறிவித்தார்.

அதன் அடிப்படையில் குட்டி யானை வாகனங்களை அமரர் ஊர்தியாக மாற்றி, மருத்துவமனைகளுக்கு அர்பணிக்க முடிவு செய்தார். அதனை ஒரு நிகழ்ச்சியாக நடத்தினால், கட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கும் என நினைத்து, வாகனங்களை அணிவகுத்து ஒரு இடத்தில் நிற்க வைத்து, சேவையை தொடங்கி வைத்தார். ஆனால், அங்கு நிறுத்தப்பட்ட ஒரு வாகனத்தில் சுடுகாட்டுக்கு செல்ல தயார் நிலையில் ஒரு உடலும் வைக்கப்பட்டிருந்தது.

இதனால் இந்த நிகழ்ச்சி பாஜகவுக்கு பெரும் தலைவலியாக முடிந்தது. ஒரு துக்க நிகழ்ச்சியில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ, அப்படி நடக்காமல் போட்டோ சூட் நடத்தி இருப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. எனினும் இது குறித்து விளக்கம் அளித்த அலோக் சர்மா, 6 வாகனங்களை அர்பணிக்க முடிவு செய்து, ஒரு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியதாகவும், அப்போது, ஒருவர், ஒரு உடலை ஏற்றி சுடுகாட்டுக்குச் செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டதால், அங்கேயே ஒரு உடலை ஏற்றியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், உடலை வாகனத்தில் வைத்து, தொடக்க விழா நடத்த திட்டமிடவில்லை என்றும், ஆபத்து என கேட்டதால், அப்படி செய்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

அண்மையில் இதே போன்ற இன்னொரு வினோத சம்பவமும் நடைபெற்றது. குற்றுயிரும் குலையுயிருமாய் கிடந்த கொரோனா நோயாளிகளுக்காக சிலிண்டர் லாரி வந்த நிலையில், அதற்கு பலூன் கட்டி, தேங்காய் உடைத்து, தொடக்க விழா எடுத்தார் பாஜக அமைச்சர் துல்சிராம். அவர் வந்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்து விட்டுச் செல்லும் வரை, உயிரை கையில் பிடித்துக் கொண்டு நோயாளிகள் காத்திருந்ததும், சர்ச்சையை ஏற்படுத்தியது.

Leave a Response

error: Content is protected !!