Central Govtpublic interestsocial mediaworld

நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த வீடியோ சில சந்தேகத்திற்குறிய காட்சிகள்!

332views

மும்பை வாங்கனி ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை, தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றினார் மயூர் ஷெல்கே என்ற ரயில்வே ஊழியர்.நாடே அவரை பாராட்டி வரும் நிலையில், அந்த பரபரப்பு வீடியோவில் சில சந்தேகத்திற்குரிய…. அதே போல், விநோதமான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக நெட்டிசன்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

அந்த சந்தேகங்களையும் அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம். தாய் தனது குழந்தையை கையில் பிடித்து அழைத்துச் செல்கிறார். ரயில் வருவதற்கு சற்று முன்பு, தண்டவாளத்தை நெருங்குகிறார். அந்த குழந்தை தண்டவாளத்தில் விழுகிறது. குழந்தை தண்டவாளத்தில் விழுந்த உடன் அந்த தாய், விலகிச் சென்று விடுகிறார். பின்னர் அந்த குழந்தையை தூக்க முயல்கிறார். ஆனால் குழந்தைக்கு அருகில் செல்லாமல், தூரமாக இருந்து கொண்டு, தூக்க முயற்சிக்கிறார். ஏன் அவர் இப்படி செய்ய வேண்டும் என சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து ஆய்வு செய்த போது, அந்த பெண் கண் பார்வை அற்றவர் என தெரியவந்துள்ளது. அதே நேரம் கீழே விழுந்த அந்த ஆண் குழந்தைக்கு வயது 6. தாய் கண்பார்வை அற்றவராக இருந்தாலும், குழந்தை அந்த தாயை வழிநடத்தும் அளவிற்கு போதிய அறிவாற்றல் பெற்றவன். அப்படி இருந்தும், ஏன் அந்த பெண், ரயில் வரும் போது, தண்டவாளத்தை நெருங்கினார், என சந்தேகம் எழுப்புகின்றனர். அவரை அந்த குழந்தை சரியாக வழி நடத்தவில்லையா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இதற்கு பதில், அந்த குழந்தை, தண்டவாளத்திற்கு அப்பால் இருந்த ஏதோ ஒன்றைக் குறித்து, பேசிக் கொண்டு சென்றபோது, தவறி கீழே விழுந்துள்ளது.
அடுத்ததாக, இந்த சம்பவங்களை தூரத்தில் இருந்து பார்க்கும் இன்னொரு ரயில்வே ஊழியர், அருகில் செல்லாமல், பிரமித்து போய் நிற்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. அங்கு குழந்தை காப்பாற்றப்பட்டு விட்டது தெரிந்த உடன் அவர், உற்சாகமாக பச்சைக் கொடியை வேகமாக அசைத்து, அந்த சூழலிலும் தனது கடமையை ஆற்றி இருக்கிறார்.

அதே நேரம் குழந்தை தண்டவாளத்தில் விழுந்த அடுத்த நொடியே தன் உயிரை பற்றி, கவலைப்படாமல், அனிச்சை செயலாக அந்த இளைஞர் மயூரா செல்கே, அந்த குழந்தையை காப்பாற்றியது, இறைவனின் கருணையாகவே மக்கள் பார்க்கின்றனர்.

Leave a Response

error: Content is protected !!