BJPCentral Govtcovid 19healthIndiaPoliticssocial media

மத்திய அமைச்சரின் சகோதரருக்கு பெட் இல்லை? – உத்தரப்பிரதேசத்தில் அவலம்!

174views


உத்தரப்பிரதேச அரசு கொரேனாவை முறையாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் கடுமையாக எழுந்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் வி.கே.சிங் என்பவர், யோகி அரசை நோக்கி வெளியிட்ட டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி. காசியாபாத்தில் உள்ள எனது சகோதருக்கு பெட் வசதி செய்து கொடுங்கள், என மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களை டேக் செய்து, வி.கே.சிங், டுவிட் வெளியிட்டார். உத்தரப்பிரதேசத்தில் நோயாளிகளுக்கு பெட் வசதி கூட இல்லாததை, மத்திய அமைச்சரே அம்பலப்படுத்தியால் சமூக வலைதள வாசிகளும் அதனை பெருமளவில் பகிர்ந்தனர். மத்திய அமைச்சரின் சகோதரருக்கு இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாக உள்ளது என்பதை சிந்தியுங்கள் என்றும் எதிர்கட்சிகள் வேதனை தெரிவித்தன.

இதனால் அதிர்ந்து போனது உ.பி. பாஜக அரசு. இந்நிலையில் தனது டுவிட்டை அவசரகதியில் டெலிட் செய்த, மத்திய அமைச்சர் விகே சிங், காசியாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது, தனது சொந்த ரத்த சகோதரர் இல்லை என பல்டியடுத்தார்.

ஆக மொத்தம் காசியாபாத் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உரிய பெட் வசதி இல்லை என்பதே செய்தி. அது மத்திய அமைச்சரின் சொந்த சகோதராக இருந்தால் என்ன பக்கத்து வீட்டுக்காராக இருந்தால் என்ன என்று நெட்டிசன்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரவல் தடுக்கப்படாததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை என குற்றம்சாட்டப்படும் நிலையில், இறந்தவர்களை அடக்கம் செய்யக் கூட சுடுகாடுகள் இல்லாத அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

Leave a Response

error: Content is protected !!