BJPcrimeIndiapublic interestsocial media

ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல மறுத்த 10 வயது சிறுவன் மீது வெந்நீர் ஊற்றிய பாஜக பிரமுகருக்கு பொதுமக்கள் தர்மஅடி!

752views

மேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என சொல்ல மறுத்து, ஜெய் பங்ளா, அதாவது வங்காளம் வாழ்க எனச் சொன்ன 10 வயது சிறுவன் மீது கொதிக்கும் நீரை ஊற்றி, தாக்குதல் நடத்திய, பாஜக பிரமுகரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த நிலையில், அவர் தப்பி ஓடிவிட்டார்.

நாடியா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் டீக்கடை நடத்தி வந்த பாஜக பிரமுகர், பிராம்னிக் என்பவருக்கு சிறுவர்களை அழைத்து ஜெய் ஸ்ரீ ராம் என சொல்ல வைக்கும் வினோத பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அந்த வழியாகச் சென்ற, மகாதேவ் சர்மா என்ற 10 வயது சிறுவனை அழைத்து, ஜெய் ஸ்ரீ ராம் என முழங்கச் சொல்லி இருக்கிறார். ஆனால் அந்த சிறுவனோ, ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல மறுத்து, ஜெய் பங்களா அதாவது, வங்காளம் வாழ்க எனச் சொல்லி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பாஜக பிரமுகர், அந்த சிறுவனை தாக்கியதுடன், அவன் மீது சுடு தண்ணீரை எடுத்து ஊற்றியுள்ளார்.

இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சிறுவனை மீட்டதோடு, பாஜக பிரமுகருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். டீக்கடையும் சூறையாடப்பட்டது. காவல்துறையினர் பாஜக பிரமுகர் பிராம்னிக்கை கைது செய்ய வேண்டும் என தேசிய நெடுஞ்சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் போலீசுக்கு பயந்து அந்த பாஜக பிரமுகர் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 வயது சிறுவன் மகாதேவ் சர்மாவிற்கு தாய் இல்லை. அவனது தந்தை திரிணாமுல் காங்கிரஸ் தீவிரத் தொண்டர் ஆவார். இதனால் மகாதேவும், தீவிர மமதா பானர்ஜி ஆதரவாளர். பாஜக பிரமுகரை தைரியமாக எதிர்கொண்ட 10 வயதுச் சிறுவனை திரிணாமுல் தலைவர்கள் பாராட்டி வருகின்றனர்.

Leave a Response

error: Content is protected !!