2021 ElectionBJPcoronaPoliticspublic interestsocial media

மாற்றப்படுகிறாரா பாஜக எல்.முருகன்?

379views

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கு எதிராக மத்திய தலைமைக்கு சீனியர்கள் புகார் அனுப்பியுள்ளதாகவும், தேர்தலுக்கு பிறகு அவர் மாற்றப்படுவார் என அவர்கள் நம்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தனித்து நின்றால் கூட, 60 தொகுதிகளில் வெற்றி பெறும் என அனல் பறக்க பேசினார் முருகன். ஆனால் அமித்ஷாவே ஒற்றை காலில் நின்று கூட 20 தொகுதிகளுக்கு மேல் பெற முடியவில்லை.

இந்நிலையில் பாஜக பெற்ற 20 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் படுதோல்வியே கிடைக்கும் என்றும் முருகன் தேர்தல் பணிகளை சரிவர செய்யவில்லை என்றும் மத்திய பாஜக தலைமைக்கு சீனியர்கள் சிலர் பரபரப்பு புகார் கடிதங்களை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து கேட்டுப் பெறுவதில் தோல்வி, தமிழக பாஜக பிரபலங்களை பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துவதில் தோல்வி, தாராபுரத்தை தாண்டி எங்கும் கவனம் செலுத்தவில்லை என பல புகார்கள் நீண்டு கொண்டே செல்கிறதாம். தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பாதகமாக வந்தால், முருகனுக்கு தேசியத் தலைமை ரிவிட் அடிக்கும் என்கிறார்களாம் அந்த சீனியர்கள். ஆனால் முருகன் ஆதரவாளர்களோ, புகார்கள் புஸ்வானமாகிவிடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Response

error: Content is protected !!