admkBJPcovid 19crimePoliticssocial media

வீடு புகுந்து மோடி படம் உடைப்பு – மணல் அள்ளுவதில் அதிமுக – பாஜக பிரமுகர்கள் இடையே மோதல்!

221views

நான் சென்ட்ரல், நீ ஸ்டேட்டு, என்னைக் கேட்காமல் மணல் திருடுகிறாயா எனக் கேட்டு, அதிமுக பிரமுகரிடம் பிரச்னை செய்த, பாஜக தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் ஆசைக்கனி என்பவரின் வீடு அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. கள்ளப்பெரம்பூரைச் சேர்ந்த பாஜக பெண் நிர்வாகி ஆசைக்கனிக்கும், அதிமுக பிரமுகர் மோகன் தாஸ் என்பவருக்கும் தான் பிரச்னை.

இருவருமே சட்டவிரோதமாக வெண்ணாற்றில் மணல் திருடி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்மையில், மோகன்தாஸ் தரப்பு லாரியில் மணல் அள்ளிக் கொண்டு வந்தபோது, ஆசைக்கனி தரப்பு தடுத்து நிறுத்தி இருக்கிறது. காவல்துறையும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அதிமுக பிரமுகர் மோகன்தாஸ் தரப்பினர், ஆசைக்கனியின் வீட்டிற்குள் புகுந்து, அடித்து நொறுக்கியதுடன், மோடியின் படத்தையும் பீஸ் பீஸாக நொறுக்கியுள்ளனர்.

இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை 12 பேரை கைது செய்துள்ளது.மணல் அள்ளுவதில் மாநிலக் கட்சி நிர்வாகியும், தேசிய கட்சி நிர்வாகியும் போட்டி போட்டுக் கொண்டு, சண்டைபோட்டது, அப்பகுதி மக்களிடையே சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response

error: Content is protected !!