2021 ElectionBJPcovid 19dmkPoliticssocial mediaகரூர்

வாக்கு எண்ணும் அறைக்கு பக்கத்து அறையில் நள்ளிரவில் திடீரென இயங்கிய ஏசி, கம்யூட்டர் – திமுகவினர் அதிர்ச்சி

371views

கரூர் – சேலம் சாலையில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு, பக்கத்து அறையில், நள்ளிரவில் திடீரென ஏ.சி., கம்யூட்டர் ஆகியவை இயங்கியதால், திமுகவினர் அதிர்ச்சியடைந்து, நள்ளிரவில் அணி திரண்டு பிரச்னை எழுப்பியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர், முதல்கட்ட விசாரணை நடத்தி விட்டு, காலையில் விரிவாக விசாரிப்போம் என கூறி அனுப்பி விட்டனராம். இதனால் திமுகவினருக்கு கிலி ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் சில தகவல்கள் பரபரப்பு ரகம்.

வாக்கு எண்ணும் மையமான குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த அமானுஸ்ய சம்பவத்திற்கு முன்பு மேலும் 2 சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதாவது இந்த கல்லூரிக்கு பாஜக தமிழக மேலிட பொருப்பாளர் சிடி ரவி இரண்டு முறை, தனி விமானத்தில் வந்து, கூட்டங்கள் நடத்தினாராம். அதே போல், அண்ணாமலைக்கு பிரச்சாரம் செய்வதற்காக, அமித்ஷா கூட இந்த கல்லூரிக்கு தான் வந்து இறங்கினாராம்.எனவே 3 புள்ளிகளையும் இணைத்து பார்த்த திமுகவினர் தூக்கத்தை தொலைத்தவர்களாக, கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு, திமுக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Response

error: Content is protected !!