cinemapublic interestsocial mediaகரூர்மாவட்டம்

ஆண்ட பரம்பரை எங்கள் வீட்டில் கக்கூஸ் கழுவ தயாரா? முடி திருத்துவோர் ஆவேசம்!

213views

ஆண்ட பரம்பரை எனப்படுவோர் எங்கள் வீட்டில் கக்கூஸ் கழுவினால், நான் பணம் தருகிறேன், ஐஏஎஸ் அதிகாரியாகவே இருந்தாலும் எங்களிடம் தான் தலை குனிந்து உட்கார வேண்டுமே தவிர, நாங்கள் யாருக்கும் தலை குணிய மாட்டோம் என முடி திருத்துவோர் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.

மண்டேலா திரைப்படத்தில் முடிதிருத்துவோராக நடித்த யோகி பாபுவை அந்த ஊரை சேர்ந்த இரண்டு சாதியினர் சேர்ந்து மிகவும் மோசமாக நடத்துவார்கள். கழிவறை கழிவச் சொல்லியும், வீட்டின் பின்புற வாசல் வழியாக வர வழைத்தும் இழிவு படுத்துவார்கள். இது முடி திருத்துவோரான மருத்துவர் சமுதாயத்தை காயப்படுத்தியுள்ளது.

இதனை கண்டித்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என முடி திருத்துவோர் கரூரில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தொடர்ந்து பேட்டியளித்த அந்த அமைப்பினர், மருத்துவர் இனம் யாருக்கும் தலைகுனிந்து நிற்க மாட்டோம், நீங்கள் தான் எங்களிடம் தலைகுனிய வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தனர்.

Leave a Response

error: Content is protected !!