sports

“இந்த பையன் பவுலிங் என்னை ஆச்சர்யப்படுத்தியது” – இளம் பந்துவீச்சாளரை பாராட்டிய சேவாக்!

99views

இந்த இளம் வீரரின் பந்துவீச்சை பார்க்கையில் எனக்கு, நெஹ்ரா மற்றும் ஜாகீர்கான் பந்துவீச்சு நினைவுக்கு வருகிறது என பாராட்டியிருக்கிறார் விரேந்திர சேவாக்.

கடந்த திங்கள் கிழமை அன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இரு அணிகளும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி ஆரம்பம் முதலே தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. கேஎல் ராகுல் 91 ரன்களுக்கும், தீபக் ஹூடா 64 ரன்களுக்கும் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 221 ரன்கள் எடுத்திருந்தது.

ராஜஸ்தான் அணியில் ஏனைய வீரர்கள் தங்களது பந்துவீச்சில் ரன்களை வாரிக் கொடுத்தனர். இருப்பினும் 22 வயதான சக்காரியா தனது அறிமுக போட்டியில் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குறிப்பாக கடைசி ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து கேஎல் ராகுல் மற்றும் ரிச்சர்சன் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். அதிலும் குறிப்பாக 13 டாட் பந்துகள் வீசினார்.

திறம்பட செயல்பட்ட இவரை குறிப்பிட்டு பேசிய சேவாக், ஜாகீர் கான் மற்றும் நெஹ்ரா இருவருடனும் அவரது பந்து வீச்சை ஒப்பிட்டு பேசியிருக்கிறார். இதுகுறித்து சேவாக் பேசுகையில், “உள்ளூர் போட்டிகளில் இவர் விளையாடுவதை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவிற்கு சிறப்பாக பந்து வீசுவார் என கவனிக்கவில்லை. அவரது மனோபாவம் மற்றும் துணிச்சலான பந்துவீச்சு இரண்டையும் பார்க்கையில் எனக்கு நெஹ்ரா மற்றும் ஜாகீர்கான் இருவரும் நினைவுக்கு வருகின்றனர். அவர்களும் இந்திய அணிக்காக விளையாடிய போது பேட்ஸ்மேன்கள் கண்டு எந்தவிதத்திலும் பயந்ததாக நான் கண்டதில்லை.

இந்த இளம் வயதில் இப்படி பந்துவீசி கையில் நிச்சயம் சிறப்பான எதிர்காலம் இவருக்கு இருக்கிறது உள்ளூர் போட்டிகளில் இருக்கும் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசுவது வித்தியாசமானது அதேபோல் ஐபிஎல் போன்ற போட்டிகளில் புகழ்பெற்ற மற்றும் அதிரடியான வீரர்களுக்கு பந்துவீச நேரிடும் அத்தகைய சமயத்திலும் இந்த பயமற்ற செயலை பார்க்கையில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

உள்ளூர் போட்டிகளில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் போன்று ஐபிஎல் தொடரில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் இருக்க மாட்டார்கள். ஏனெனில் ஐபிஎல் போன்ற மிகப்பெரிய தொடரில் புகழ்பெற்ற மற்றும் அதிரடிக்கு பெயர் போன வீரர்கள் விளையாடுவர். அவர்களுக்கு பந்து வீசுவது என்பது வித்தியாசமானது. அதனை தனது முதல் போட்டியில் சக்காரியா சிறப்பாக செய்திருக்கிறார். அடுத்தடுத்த போட்டிகளில் இவரது பந்துவீச்சை காண நான் மிகுந்த ஆவலோடு இருக்கிறேன்.” என பாராட்டினார்.

இந்த போட்டியில் இமாலய இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் சதம் விளாசினார். இறுதி வரை நின்று போராடிய அவர் கடைசி பந்தில் பவுண்டரி அடிக்க முடியாமல் ஆட்டம் இழந்ததால் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. சாம்சன் 63 பந்துகளில் 119 ரன்கள் அடித்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் அடங்கும்.

Leave a Response

error: Content is protected !!