sports

ஒரு மேட்ச் தோத்தா என்ன? யாரு வந்தாலும் ஜெயிப்போம்.. எங்க டீம் அப்படி! ரஷீத் கான் ஆரூடம்!

91views

அனைத்து அணியையும் வெற்றி பெறும் அளவிற்கு எங்கள் அணி பலம் மிக்கதாக இருக்கிறது என நம்பிக்கை தரும் அளவிற்கு பேசியிருக்கிறார் ரஷித் கான்.

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரு அணிகளும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நித்தீஷ் ராணா மற்றும் கில் இருவரும் நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்தனர். பின்னர் வந்த திரிப்பாதி அதிரடியாக விளையாடி அரைசதம் கண்டார். இதனால் ஹைதராபாத் அணி மிகவும் திணறியது. இருப்பினும் மெடில் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி ரஸ்ஸல், மார்கன் ஆகியோரை சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழக்க செய்து, இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 187 ரன்கள் எடுத்தது.

இலக்கை துரத்திய ஹைதராபாத் அணி அதிரடியாக விளையாடி வந்தாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியாமல் தடுமாறியது. 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்கள் எடுத்திருந்த ஹைதராபாத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இன்றைய போட்டியில் தனது வழக்கமான பந்துவீச்சு திறனை வெளிப்படுத்திய ரஷித் கான் 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி நம்பிக்கை அளித்தார். மற்ற பந்து வீச்சாளர்களுக்கு அன்றையதினம் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை. அதேநேரம் பேட்டிங்கிலும் கடைசி கட்டத்தில் சரிவர ரன் குவிக்க முடியாமல் போனதும் ஹைதராபாத் அணிக்கு இந்த தோல்வி உறுதியானது.

போட்டி முடிந்த பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ரசித் கான் கூறுகையில், “முதல் போட்டியை இழந்தால் என்ன அடுத்தடுத்து வரும் போட்டிகளில் நிச்சயம் சிறப்பாக செயல்படுவோம். அனைத்து அணியையும் வெல்லும் அளவிற்கு எங்களது அணியில் சிறப்பான வீரர்கள் இருக்கிறார்கள். முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டும் துரதிஸ்டவசமாக தோல்வியை தழுவியது சற்று வருத்தம் அளித்தாலும், செயல்பாடு சிறப்பாகவே அமைந்தது.

தோல்வியுற்ற பிறகும் அணி வீரர்கள் மத்தியில் நல்ல மனநிலை நிலவி வருகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் பலம் பொருந்திய அணியாக நாங்கள் விளங்குகிறோம். எந்த அணியையும் வெல்லும் அளவிற்கு திறம்பட இருக்கிறோம். ஆகையால் இவரும் போட்டிகளில் நிச்சயம் எதிரிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும்.” என்றார்.

ஹைதராபாத் அணி தனது 2-வது போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

Leave a Response

error: Content is protected !!