sports

திணறும் சிஎஸ்கே.. அடுத்த போட்டியில் இந்த இரண்டு வீரர்கள் இருக்கமாட்டார்கள்; பிளெமிங் அறிவிப்பு

60views

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் இரண்டாவது போட்டியில் இந்த இரண்டு வீரர்கள் இடம் பெற மாட்டார்கள் என பயிற்சியாளர் பிளெமிங் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

ஐபிஎல் தொடரின் 14வது சீசன் கடந்த 9ஆம் தேதி துவங்கி இரண்டு லீக் போட்டிகள் முடிவுற்ற நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் சென்னை அணியில் இடம்பெற்ற கிட்டத்தட்ட பத்து வீரர்களும் பேட்டிங் ஆடக் கூடிய அளவிற்கு தேர்வு செய்திருந்தனர். ஆனால் பந்துவீச்சில் சரியான கவனம் செலுத்தாததால் முதல் போட்டியில் தோல்வியுறும் நிலைக்கு ஏற்பட்டது.

முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 188 ரன்கள் அடித்து இருந்தாலும், எதிரணியை திணறடிக்கும் அளவிற்கு பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெறவில்லை. அதிக ரன்களை விட்டுக் கொடுத்தும் விக்கெட் எடுக்க முடியாமலும் தடுமாறினர். இறுதியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி எளிதாக வெற்றியை பெற்றது.

இந்த சூழலில் இரண்டாவது போட்டியில் லுங்கி இங்கிடி மற்றும் ஆஸ்திரேலிய வீரர் பெஹேரன்டாப் ஆகிய இருவரும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாக இரண்டாவது போட்டியிலும் இடம்பெற மாட்டார்கள் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் விளையாட போவதில்லை என விலகி இருக்கிறார்.

அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேடிவந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, கடந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய பெஹேரன்டாப் இம்முறை சென்னை அணிக்கு எடுக்கப்பட்டார். இவர் இடம் பெறும் செய்தி கடந்த 7ஆம் தேதி உறுதியானது. ஆகையால் அதன் பிறகு இந்தியா வந்தடைந்த இவர் 7 நாட்கள் தனிமையை பட்டியலில் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதாலும், அதன் பிறகு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதாலும் இரண்டாவது போட்டியில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை.

அதேபோல் லுங்கி இங்கிடி தாமதமாக இந்தியா வந்ததால், அவரும் தனிமைப்படுத்துதல் இடம்பெற வேண்டும் என்ற காரணத்திற்காக இரண்டாவது போட்டியில் இடம் பெற இயலாமல் போனது.

முதல் போட்டியில் சென்னை அணி பந்து வீச்சில் திணறியதை நாம் கண்டோம். இரண்டாவது போட்டியிலும் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்கள் அணியின் இடம்பெறாது சற்று பின்னடைவை தந்துள்ளது. இவற்றை சரிகட்ட மீண்டும் பேட்டிங்கில் சென்னை அணி அதிக ரன்களை குவித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இரண்டாவது போட்டியில் சென்னை அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது, வான்கடே மைதானத்தில் வரும் 16ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

Leave a Response

error: Content is protected !!