2021 ElectionadmkBJPcongresscovid 19dmdkdmkelectionIndiaPoliticspublic interestsocial mediasocietyதிருச்சி

ஒரு ஓட்டின் விலை ரூ. 35!? எந்தக் கட்சி எவ்வளவு பணம் கொடுத்தது தெரியுமா?

169views

தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக கட்சிகள் பரவலாக பண வினியோகம் செய்த தகவல்கள் கிடைத்துள்ளன. சில இடங்களில் இதற்கான ஆதாரங்களும் உள்ளது. இதில் அதிமுகவே அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்துள்ளது. அதிமுக சில இடங்களில் ஆயிரம் ரூபாய் பணமும், ஆயிரம் ரூபாய் பரிசுக் கூப்பனும் கொடுத்துள்ளது.

திமுக ரூ. 500 வீதம் பண வினியோகம் செய்துள்ளது. மணப்பாறை தொகுதியில் திமுக கூட்டணி வெறும் 100 ரூபாய் கொடுத்ததாக அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர். கடையநல்லூரில் திமுக கூட்டணியினர் 3 பேர் உள்ள ஒரு குடும்பத்துக்கு ரூ. 100 மட்டுமே கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பழனி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக ரூ. 1000 ரூபாய் பணமும், ஆயிரம் பணத்திற்கான பரிசுக் கூப்பனும் வழங்கியுள்ளனர். இதே போல் அமமுகவினர் சில இடங்களில் ரூ. 800 வீதம் பண வினியோகம் செய்துள்ளனர். மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் பண வினியோகம் செய்ததாக புகார்கள் எழவில்லை.

Leave a Response

error: Content is protected !!