மகன் முன்பே ரிக்சா ஓட்டுநரை நடுரோட்டில் வைத்து தாக்கிய போலீஸ்- மாஸ்க் அணியாதது காரணமாம்!

மத்திய பிரதேச மாநிலம் தாமோவில் மாஸ்க் அணியவில்லை என்று கூறி, ஏழை ரிக்சா ஓட்டுநர் ஒருவரை 2 போலீசார் கொடூரமாக தாக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரிக்சா ஓட்டுநரின் மகன் தனது தந்தையை விட்டுவிடுமாறு கெஞ்சியும், அதனை காதில் வாங்காமல் போலீசார் கொடூரமாக தாக்கியது, சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த 2 போலீசாரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தனது தந்தை மாஸ்க் அணிந்ததாகவும், அந்த மாஸ்க் நழுவி கீழே இறங்கியதாகவும், இது குறித்து விசாரித்த போலீசார் தனது தந்தையை தாக்கியதாகவும் அந்த சிறுவன் தெரிவித்துள்ளார். அதே நேரம், அந்த ரிக்சா ஓட்டுநர் போலீசாரின் சட்டையை பிடித்ததாகவும், அதன் காரணமாகவே அவரை போலீசார் தாக்கியதாக மத்திய பிரதேச காவல்துறை தாக்குதலை நியாயப்படுத்த முயற்சி செய்துள்ளது.
பாஜக ஆட்சியில் ஏழைகள் துன்புறுத்தப்படுவதாக அந்த மாநில காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.