2021 ElectionBJPCentral Govtcongresscovid 19IndiamuslimPoliticssocial media

மம்முட்டியை பார்த்து பொறாமையில் கூச்சலிட்ட பாஜகவினர்… பாஜகவை கொரோனா என்று கிண்டல் அடித்த மம்முட்டி!?

594views

கொச்சியில் வாக்களிக்க வந்த நடிகர் மம்முட்டியை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு, புகைப்படம் எடுத்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல், பாஜகவினர் கூச்சல் எழுப்பிய சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. கொச்சியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு நடிகர் மம்முட்டி தனது மனைவி சுல்பத்துடன் வந்திருந்தார்.

இதனையறிந்த ஊடகவியலாளர்கள் அவரை வீடியோ எடுத்தனர். மம்முட்டி இடதுசாரி கட்சிகளின் ஆதரவாளராக பார்க்கப்படுவதால், அவரை ஊடகவியலாளர்கள் படம் பிடித்தது, பாஜகவினருக்கு பிடிக்கவில்லை. இதனால் அங்கு வாக்களிக்க வந்த பாஜக வேட்பாளரின் மனைவி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மம்முட்டிக்கு எதிராக கூச்சல் எழுப்பினர்.

மம்முட்டியை ஊடகவியலாளர்கள் படம் பிடிப்பது தங்களுக்கு தொந்தரவாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். இதனைத் தொடர்ந்து, வாக்களித்த பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த மம்முட்டி, கொரோனா பரவி வருகிறது, அதனால் கவனமாக இருங்கள் என கூறிவிட்டுச் சென்றார்.
மம்முட்டி பாஜகவைத் தான் கிண்டலாக கொரோனா என்று சொல்கிறார் என அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அஜித், விஜய், விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் தங்களது நிலைப்பாட்டை குறிப்புகளால் உணர்த்திய நிலையில், மம்முட்டியும் அதே போன்ற பாணியில் பேசியதாக கூறப்படுகிறது.

Leave a Response

error: Content is protected !!