sports

முகமது நபி, ரஷித் கான் போன்ற வீரர்கள் இருக்கும்பொழுது இவரை நாங்கள் ஏன் தேர்வு செய்தோம்; காரணத்தை சொன்ன டாம் மூடி!!

131views

2021 ஐபிஎல் போட்டி தொடர் இன்னும் இரண்டு நாட்களில் கோலாகலமாக நடைபெற உள்ளது, இதில் முதல் போட்டி வருகிற வெள்ளிக்கிழமை சென்னை மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையில் நடைபெற உள்ளது.

இன்னும் இந்த போட்டிக்கு ஓரிரு நாட்களே உள்ளதால் அனைத்து அணி வீரர்களும் தங்களது அணியை மிக தீவிரமாக தயார் செய்துகொண்டு வருகின்றனர்,

இந்நிலையில் கடந்த ஆண்டு கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி யும் ஒன்றாகும். ஆனால் எதிர்பாராதவிதமாக கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்று தோல்வியை தழுவி வெளியேறியது.

இதன் காரணமாக 2021 ஐபிஎல் போட்டியில் எப்படியாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்க காத்திருக்கும் ஐதராபாத் அணி தங்களது அணியில் பல மாற்றங்களைச் செய்தது. கேதர் ஜாதவ், சுஜித் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முஜிபுர் ரஹ்மான் போன்ற முக்கியமான வீரர்களை தங்களது அணியில் தேர்ந்தெடுத்துக் கொண்டது.

டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி நிச்சயம் இந்த ஆண்டு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உலகின் தலைசிறந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களான முஹம்மத் நபி மற்றும் ரஷித் கான் போன்ற வீரர்கள் இருந்த போதும்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முஜிபுர் ரஹ்மானை தேர்வு செய்தது இதற்கு காரணம் என்னவென்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

முஜீபுர்ரஹ்மான் தேர்வு குறித்து ஹைதராபாத் அணியின் பயிற்சியாளரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரருமான டாம் மூடி தெரிவித்ததாவது, முஜிபுர் ரஹ்மான் டி20 போட்டியில் ஒரு சிறந்த வீரர், இவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக பல முறை சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.இவருடைய தேர்வு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நிச்சயம் மிகப் பெரும் உதவியாக இருக்கும்.மேலும் இவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தார் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

முஜிபுர் ரஹ்மான் 2018 ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி 11 போட்டிகளில் பங்கேற்று 14 விக்கெட்களை வீழ்த்தினார் மேலும் இவருடைய எக்கனாமிக் ரேட் 6.99. மேலும் இவர் 2021 ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 1.50 ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response

error: Content is protected !!