chennai

சரத்குமார் மற்றும் ராதிகாவிற்கு ஓராண்டு சிறை தண்டனை – மாற்றத்தை ஏற்படுத்தும் நேரம் வந்துவிட்டது என 2 நாட்களுக்கு முன்பு தான் பேசினார் ராதிகா!

528views

படம் தயாரிப்பதற்காக மேஜிக் பிரேம்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து 2 கோடி ரூபாய் கடன் பெற்ற வழக்கில் சரத்குமார், ராதிகா, லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இது தொடர்பான செக் மோசடி வழக்கும் தொடுக்கப்பட்டது. தனித்தனியாக தொடுக்கப்பட்ட 7 வழக்குகளில் சரத்குமாருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

ராதிகாவிற்கு 2 வழக்குகளில் தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருவரும் கைது செய்யப்படுவார்களா, அல்லது ஓராண்டு தண்டனை என்பதால் பிணை வழங்கப்படுமா என்பது பின்னரே தெரியவரும்.   

Leave a Response

error: Content is protected !!