
146views
விபத்தில் சிக்கி கவிழ்ந்த நிலையில் இருந்த காரை நிமிர்த்தி, அதில் இருந்த அப்துல்லா என்பவருக்கு முதலுதவி செய்து, ஆம்புலன்சை வர வைத்து, மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரிலிருந்து மாத்தூர் செல்லும் வழியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே கைநாங்கரையில் ஒரு கார் கவிழ்ந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்ற அமைச்சர் விஜயபாஸ்கர், ஓடிச் சென்றதாகவும், பொதுமக்களின் உதவியோடு காரை நிமிர்த்தினார்.
அண்டக்குளத்தைச் சேர்ந்த அப்துல்லா என்பவர் மட்டுமே காரிலிருந்தார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த அமைச்சர், ஆம்புலன்ஸை வரவலைத்து, அவரை இறைவன் அருளால் லேசான காயங்களோடு பிழைத்தார், அவருக்கு தேவையான முதலுதவி செய்து அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
add a comment