jobsmuslimworld

ஷகர், இப்தார் நிகழ்ச்சிகளை பள்ளிவாசல்களில் நடத்த சவுதி அரேபியா தடை..!

143views

ஷகர் மற்றும் இப்தார் நிகழ்ச்சிகளை பள்ளி வாசல்களில் நடத்த தடை விதித்து, சவுதி அரேபியா அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. உலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. இதனால் கடந்த ஆண்டு, ரமலான் மாதத்தில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது, கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக தளர்த்தப்பட்ட நிலையில், நாள் ஒன்றுக்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை, படிப்படியாக உயர்ந்து 700ஆக அதிகரித்துள்ளது. மக்கள் சமூக விலகளை அதிகம் கடைபிடிக்காததால், தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில், மீண்டும் ரமலான் மாதத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க சவுதி முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து, ஷகர் மற்றும் இப்தார் நிகழ்ச்சிகளை பள்ளிவாசல்களில் நடத்த தடை விதித்துள்ளது. மேலும் ரமலான் மாதத்தில் நோய் எதிர்ப்பு சக்கித மிக்கவர்களுக்கு மட்டுமே உம்ராவிற்கு அனுமதி வழங்கப்படும் என சவுதி கூறியுள்ளது. சவுதி அரேபியோவின் இந்த தடை உத்தரவு ஒரு தரப்பு இஸ்லாமியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டும் வீட்டிலேயே ரமலான் நோன்பு நிகழ்ச்சிகள் கடைபிடிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பள்ளிவாசல்களில் நோன்பை கடைபிடிக்க மக்கள் ஆர்வமாக இருந்த நிலையில், சவுதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response

error: Content is protected !!