cricketsports

இந்த அணி இந்த முறையும் கோப்பையை வெல்லாது; அடித்து சொல்லும் ஆகாஷ் சோப்ரா !!

85views

2021 கான ஐபிஎல் போட்டி வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி துவங்க உள்ளது. , பல விதிமுறைகளை உள்ளடக்கிய இந்த தொடரில் எப்படியாவது வெல்ல வேண்டுமென்று ஒவ்வொரு அணியும் தங்களது பயிற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு உள்ளது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் போட்டியில் எந்த அணி வெல்லும், யார் மிக மோசமாக செயல்படுவார், எந்த வீரர் அதிக ரன்களை எடுப்பார் போன்ற கருத்து கிரிக்கெட் வல்லுனர்கள் இடையே பேசு பொருளாக உள்ளது.

இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் குறித்து ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல் அணி மிக சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது, மும்பை மற்றும் டெல்லி இடையிலான இறுதிப்போட்டியில் டெல்லி அணி மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது.இதனால் இந்த ஆண்டு எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு காத்திருக்கும் டெல்லி அணி பல்வேறு மாற்றங்களை தங்களது அணியில் நிகழ்த்தியுள்ளது.

இருந்தபோதும் சமீபமாக நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு பலமான காயம் ஏற்பட்டது இதனால் இவரால் ஐபிஎல் போட்டியில் பங்கு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால்,அந்த அணியின் புதிய கேப்டனாக அதிரடி வீரர் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா டெல்லி கேப்பிடல் குறித்து தனது கருத்தை தெரிவித்ததாவது,டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இந்த 2021 ஐபிஎல் போட்டியில் மிக சிறப்பாக செயல்படுவார், மேலும் இந்த ஐபிஎல் போட்டியின் மோஸ்ட் வேளியபுள் பிளேயராக (Mvp) வலம் வருவார் என்று தெரிவித்தார்.

மேலும் கடந்த ஆண்டு மிகவும் மோசமான செயல்பட்ட பிரித்வி ஷாவிர்க்கு நிச்சயம் இந்த ஆண்டு மிக சிறப்பானதாக அமையும். ஏனென்றால் இவர் தற்பொழுது அபரிவிதமான பார்மில் உள்ளார். மேலும் நிச்சயம் இவர் இந்த தொடரில் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுவார் என்றும் தெரிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் ககிசோ ரபாடா மிக சிறப்பாக செயல்பட்டு பல விக்கெட்களை வீழ்த்துவார் என்று குறிப்பிட்டிருந்தார்.மேலும் நிச்சயம் இந்தத் தொடரில் டெல்லி கேப்பிடல் அணி மிக சிறப்பாக செயல்பட்டு முதல் மூன்று இடத்தை கைப்பற்றும். ஆனால் கோப்பையை வெல்வது சந்தேகம்தான் என எனக்கு தோன்றுகிறது என்று ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் தெரிவித்திருக்கிறார்.

Leave a Response

error: Content is protected !!