cricketsports

இந்த ஆண்டில் இவர் தனது வெறியை தீர்த்துக் கொள்வார்; மற்ற அணிகளை எச்சரிக்கும் ரிக்கி பாண்டிங் !!

81views

என்னதான் சமகால கிரிக்கெட் உலகின் ஜாம்பவனாக இருந்தாலும் ஐபிஎல் தொடரில் மிக குறைந்த விலைக்கு ஏலம் போன ஸ்டீஸ் ஸ்மித், இந்த தொடரில் நிச்சயம் வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

2021 கான ஐபிஎல் போட்டி யின் முதல் போட்டி ஏப்ரல் 9ஆம் தேதியன்று சென்னை மைதானத்தில் துவங்க உள்ளது. , பல கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய இந்த தொடருக்கான ஆட்டவணை எந்த அணியும் அதன் சொந்த மண்ணில் ஒரு போட்டி கூட விளையாட முடியாதவாறு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் தங்களது சொந்த மண்ணில் விளையாட முடியாது மிகப் பெரும் பின்னடைவாக அமையக்கூடும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிற  இந்த ஐபிஎல் போட்டி இன்னும் ஓரிரு நாட்களில் நடக்க இருப்பதால் அனைத்து அணிகளும் தங்களின் வீரர்களை தயார்படுத்தி வருகின்றனர்.மேலும் இந்த ஐபிஎல் போட்டியில் எப்படியாவது கோப்பையை வென்று விட வேண்டுமென்று அனைத்து அணிகளின் பல திட்டங்களையும், உத்திகளையும் வகுத்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி கேப்பிடல் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஸ்டீவ் ஸ்மித் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது”இவர் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சிறப்பாக விளையாடியதால் அந்த அணியில் இருந்து நீக்கப்பட்டார் இதன் காரணமாக 2021 ஐபிஎல் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தை டெல்லி கேப்பிடல் அணி தேர்ந்தெடுத்தது,இந்நிலையில் இந்த ஆண்டு மிகவும் வெறியுடன் காத்துக் கொண்டிருக்கும் ஸ்டேஸ் வித் டெல்லி கேப்பிடல் அணிக்காக முதல் மூன்று இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் களம் இறங்குவார், மேலும் தனக்கு கொடுத்த வாய்ப்பை இவர் சரியாக பயன்படுத்திக் கொள்வார் என்றும் தெரிவித்தார்”.

மேலும் அவர் கூறியதாவது இந்த ஆண்டு எப்படியாவது சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ஸ்டீவ் ஸ்மித் காத்துக் கொண்டிருக்கிறார் இதற்கு மற்றுமொரு காரணம் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான மிகப்பெரும் நடைபெற உள்ளது எனவே இந்த ஆண்டு இவர் மிக சிறப்பாக செயல்பட்டால் நிச்சயம் அடுத்த ஆண்டு பெரிய அளவிலான தொகைக்கு ஏலத்தில் போவார் என்றும் தெரிவித்தார்.

டெல்லி கேப்பிடல் அணி தற்பொழுது ரிஷப் பண்ட் தலைமையில் களமிறங்க உள்ளது,சமீப காலமாக மிக அதிரடியாக விளையாடி கொண்டிருக்கும் ரிஷப் பண்ட், இந்த ஆண்டு தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் டெல்லி கேப்பிடல் அணிக்கு வெற்றி வாய்ப்பை தேடி கொடுப்பார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response

error: Content is protected !!