cricketsportsportsviral

இந்த வருட ஐபிஎல் தொடரில் கோலி துவம்சம் செய்ய காத்திருக்கும் 3 முக்கிய சாதனைகள் !!

17views

பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி 2008 முதல் ஆர்சிபி அணியில் விளையாடி வருகிறார்.

கடந்த 2013ம் ஆண்டு பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி, பெங்களூர் அணியை திறம்பட வழிநடத்தி வந்தாலும், பெங்களூரு அணி இதுவரை ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட டைட்டில் பட்டத்தை வென்றது கிடையாது, இந்திய அணிக்கு கேப்டன் பதவியை பொறுப்பேற்ற பின் பல சாதனைகளை படைத்துள்ள விராட் கோலி ஐபிஎல் போட்டியில் மட்டும் டைட்டில் பட்டத்தை வெல்லதது மிகப்பெரும் ஒரு குறையாகவே உள்ளது.

பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி இதுவரை ஐபிஎல் தொடரில் 192 போட்டிகளில் பங்கேற்று 5878 ரன்களை அடித்துள்ளார், அதில் 5சதங்களும், 39 அரை சதங்களும் அடங்கும். மேலும் இவருடைய அவரேஜ் 38.16.மேலும் ஐபிஎல் போட்டியில் அதிகமான ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தாண்டு வலுவான அணியை கட்டமைத்திருக்கும் விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் நிச்சயம் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தனது அணிக்காக இந்த ஆண்டு துவக்க வீரராக களமிறங்க உள்ளதாகவும் விராட் கோலி சமீபமாக நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தெரிவித்திருந்தார். இதனால் பெங்களூரு அணி அதிகமான ரன்களை குவிக்க முடியும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் போட்டியில் விராட் கோலி மூன்று முக்கிய சாதனைகளை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

1,இன்னும் ஐபிஎல் போட்டியில் 8 போட்டிகளில் மட்டும் விராட் கோலி பங்கேற்றால், எம்எஸ் தோனி மற்றும் ரோஹித் சர்மா செய்த சாதனையை நிறைவேற்றி விடுவார்,அதாவது ஐபிஎல் போட்டியில் இவர் இன்னும் 8 போட்டிகளில் விளையாண்டால் 200 போட்டிகளை விளையாண்ட வீரர்கள் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொள்வார். இதற்கு முன் எம்எஸ் தோனி 204 போட்டிகளும், ரோகித் சர்மா 200 போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2,இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 5 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி இன்னும் ஒரு சதம் அடித்தால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லின் சாதனையை ஈடு செய்து விடுவார், கிறிஸ் கெய்ல் ஐபிஎல் போட்டிகளில் 6 சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3, பல இடங்களிலும் களமிறங்கி சிறப்பாக செயல்படும் விராட் கோலி இந்த ஆண்டு துவக்க வீரராக களம் இறங்குவார் என்று பெங்களூரு அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.இந்நிலையில் 2016ஆம் ஆண்டு விராட் கோலி துவக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடினார்,அதில் 16 போட்டிகளில் பங்கேற்று 973 ரன்கள் அடித்து அசத்தினார் மேலும் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 150.38.

இந்நிலையில் இவர் இந்த ஆண்டு மிக சிறப்பாக செயல்பட்டு நல்ல ஒரு ஸ்டிரைக் ரேட் எடுப்பதன் மூலம் அந்த ஒரு சாதனையை முறியடிப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Response

error: Content is protected !!