2021 ElectionadmkBJPcongresscoronacovid 19dmdkdmkelectionepshealthIndiammKpmkPoliticspublic interestSdpisocial mediasocietytamilnaduttv dinakaranvckworldஉலகம்சட்டம்சிவகங்கைதலைவர்கள் வரலாறுமருத்துவம்மாவட்டம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாதுகாப்பு உடை அணிந்து வாக்களித்தார்.

103views

சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குணசேகரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் PPE கிட் அணிந்து வந்து வாக்களித்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை கொரோனா பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க ஒதுக்கப்பட்டிருந்த நிலையில்
சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் குணசேகரன் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2006 மற்றும் 2011ல் சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்‌.

அதனைதொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட குணசேகரனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த குணசேகரன் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டநிலையில் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சோதனை மேற்கொண்ட போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இல்லத்தில் தனிமையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் உள்ள வாக்குப் பதிவு மையத்தில் உரிய பாதுகாப்பு உடை அணிந்து வந்து தனது ஜனநாயக கடைமையை நிறைவேற்றினார்.

Leave a Response

error: Content is protected !!